Tuesday 8 December 2015

" 'கிங்ஸ்' இல்லைனா 'லைட்ஸ்' "..!



Disclaimer:Smoking is injurious to health.

                     "ஆமாம் அவ தான், காரை நிறுத்து மனோ. ஏன் இந்த மழையில இந்த பஸ் ஸ்டாப்ல‌ நிக்கிறானு தெரியலையே" என்று கூறியபடி காரை நிறுத்த சொன்னான் ஆனந்த்.!
"என்ன மைதிலி, ஏன் இங்க‌?! வீட்டுக்காரர் வரலையா?"
"ஓ ஆனந்த்..! ஹவ் ஆர் யூ, அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.டையாபடீஸ் பேஷன்ட்,மதியம் மயக்கம் வந்திடுச்சாம்.ஆஸ்பிட்டலில் இருக்கிறார்,பஸ்ல வீட்டுக்கு போகச்சொல்லிட்டார்."
"இஃப் யூ டோன்ட் மைண்ட், வா கார்'ல ட்ராப் செய்றோம்."
"இல்லை பரவாயில்ல.அப்பறம் எப்போ தான் பஸ்ல போய் கத்துக்கிறது.அதோ அந்த பில்டிங்க்ள‌ தேர்ட் ஃப்ளோர் தெரியுதில்ல‌ அங்க தான் ஆஃபிஸ். ஜாயின் பண்ணி ரெண்டு மாசம் ஆகுது.சென்னைக்கு வந்ததில இருந்து பஸ்ல டிராவல் செய்யவேயில்ல‌. அவர் தான் ஆபிஸ் கொண்டுவந்து விடுவார் அழைச்சிட்டு போக கார் அனுப்ச்சிடுவார்.இன்னக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி. திருச்சி மாதிரி மெட்ராஸ் இன்னும் பரிச்சியம் ஆகல.,எந்த பஸ், எந்த ரூட் ஒன்னும் புரியல்லை,பத்தாத குறைக்கு இந்த பாழாய்போன‌ மழை வேற..! ஓ சாரி, என்னப்பத்தியே மூச்சு விடாம பேசிட்டு இருக்கேன். நீ எப்படி இருக்க ஆனந்த்? பேங்க்ல வேலை கிடைச்சுட்டதா  'நர்மதா' சொன்னா. கார்ல இருக்குறது யாரு மனோவா?"தனக்கே உரிய வேகமான படபட பாஷையில் பேசினாள்..!
"நான் தான், எப்படி இருக்க" என்று கேட்டவாறு மனோ டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கினான்.
"இன்று மதியம் மாமியாருக்கு உடம்பு நல்லாயிருக்கும் வரை நல்லாதான் இருந்தேன்"..
ஆரம்பத்தில் பேசியதை தவிர எதுவும் பேசாமல் மைதிலி பேசுவதையும் அவளின் முகபாவனைகளையுமே பார்த்துக்கொண்டிருதான் ஆனந்த்.கல்லூரிக்காலங்களில் அவளை எப்படி ரசித்து பார்ப்பானோ அப்படியே..!
மனோ புரிந்துகொண்டு "நீங்க பேசிட்டு இருங்க, நான் காரை ஓரமா பார்க் பண்ணிட்டு வரேன் இன்னைக்கு ஒரு நாளாவது மெட்ராஸ் பாஷைல யார்ட்டயும் திட்டு வாங்காம வீட்டுக்கு போறேனானு பாப்போம்" என்று நகர்ந்தான்.
சிறிது அமைதிக்கு பிறகு மைதிலியே திரும்ப பேச ஆரம்பித்தாள் "அப்பறம் நீ எப்படி இருக்க.. ஓ அதான் கேட்டேன்ல!"
இருவரும் சிரித்தனர்.!
"எங்க தங்கிருக்க ஆனந்த்?"
"சி.ஐ.டி நகர்ல. நானும் மனோவும் தான் இருக்கோம். 'நர்மதா' சொன்னதா சொன்னா."
"ஆமா சொன்னா."
மறுபடி சிறிய அமைதி, இருவரின் முகத்திலும் காதல் கலந்த அச்சப்பார்வை.!
"உன்னோட இந்த சைலன்ஸ நான் ரொம்ப மிஸ் பண்றேன் ஆனந்த்.!!"
பதறியவனாய் ஆனந்த் "என்ன மைதி இது?!"
"இப்போ மைதி னு தானே சொன்ன?!"
"ஆமாம், ஏன் மிஸஸ் மைதிலினு சொல்லனுமா?"
"ச்சீய்,!"
"ஏன் ச்சீய்ங்கற, நீ மிஸஸ் தானே இப்போ.!"
"உன் வாய்ஸ்ல இத கேக்குறதுக்கு பதிலா.."
"உன் மேரேஜ் அப்போ என் வாய்ஸ கேக்கவே பிடிக்கலைனு சொன்ன.!"
"இப்பயும் சண்ட போடனுமா ஆனந்த்?"
"வேணாம்.. !மழை விட்றுச்சுனு நினைக்கிறேன்!"
"ஆமாம். யூ கேன் கோ ஆனந்த்.. எங்க மனோ?"
"வருவான்."
"அவன் கூட புரிஞ்சிட்டு போய்ட்டான் நாம தனியா பேசணும்னு. நீ ஏன் ஆனந்த் இப்ப‌டி பண்ணுற?"
"சாரி மைதி. பழைய மாதிரி இப்போ இருக்க முடியுமா?"
"ஏன்?எப்பவும் போல பேசலாமே."
"காலேஜ் பஸ் ஸ்டாப்ல நீயும் நானும் இப்ப நிக்குற மாதிரி ரெண்டு அடி கேப் விட்டு எப்போவாது நின்னுருக்கோமா?அப்போ பேசுன மாதிரி உன் கைய புடிச்சிட்டு உன்ன உரசிக்கிட்டே இப்போ பேச முடியாதில்ல.."
"ஸ்டாப் இட் ஆனந்த்."
"ஏன் மைதி?!"
"எங்க போன ஆனந்த்?மேரேஜ் அரேஞ்ச் பண்ணப்போ?அலைன்ஸ் பாக்க ஆரம்ப்பிக்கிறப்போ கூட உன்ட்ட சொன்னேனே"
"உங்க அப்பா தான் தெளிவா இருந்தாரே.!"
"போதும்.!"
"நீயே ஆரம்பிச்சிட்டு நீயே முடிக்கிற.இன்னும் நீ மாறலையா?இல்ல என்ட்ட மட்டும் தான் இப்படியா?"
"பின்ன 'வினோத்' டயும் இப்படியே பேச சொல்றீயா?மாமியார் பார்வைலே எரிச்சிடுவாங்க.."
"ஓ!வினோத் ல! பேர் மறந்துட்டேன்.ஹவ் இஸ் ஹீ?"
"ம்ம்.நல்லா இருக்கார்.எல்.ஐ.சில சீனியர் கன்சல்டன்ட்டா  ஓர்க் பண்றார்.கோயிங் ஃபைன்.உனக்கு எப்போ?"
"இப்போதைக்கு இல்ல‌"
"ஏன்? அதான் நீ ஆசைப்பட்ட மாதிரி தான் பேங்க் வேலைக்கு போய்ட்டியே!"
"ஆனா ஆசைப்பட்ட பொண்ணு வெய்ட் பண்ணாம‌ கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளே.!"
"என் ஃபேமிலி,சூழ்நிலை! உனக்கு தான் தெரியுமே.அப்பாட்ட‌ தான் பேசுனீயே."
"ம்ம்..அவர் பேசல,அழுதார்.! அது வேணாம். சரி,மனோ வரான்."
"என்ன மனோ,ஏன் இவ்ளோ லேட்?"
"கொஞ்சம் லேட் ஆகிடுச்சு மைதிலி"
"ஒரு கிங்ஸ் தானே?, இல்ல ரெண்டா?!"
"ஆங், அதுவந்து.."
"மழுப்பாத, உன் ஃப்ரண்ட் இப்போ அடிக்கிறானா?"
"இல்லை அவன் விட்டுட்டான்."
"கதை விடாத, என் கூட இருக்கிறப்பவே ஊதித்தள்ளுவான்."
ஆனந்த் சிரித்தான்.!
"ஆமா, "ஒரு தடவை அவங்க வீட்டுக்கு கெளம்பிட்டு இருந்தேன் அப்போ கால் பண்ணி வீட்ல தீப்பெட்டி இல்ல, கடைக்கு போக அலுப்பா இருக்கு, நீ உங்க வீட்ல இருந்து எடுத்திட்டு வந்திருனு சொன்னவன்தானே.!" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் மைதிலி.
"டேய்,இப்படில்லாம் வேற பண்ணிருக்கியா நீ.சரி மைதிலி உங்க ஏரியா போற பஸ் ரெண்டு க்ராஸ் ஆனுச்சே, நீ ஏறல?"
"இல்லை எனக்கு தான் எந்த பஸ்னு தெரியாதே.."
"ஆனந்த், நீ பாத்து சொல்லிருக்கலாமே?!"
வெகுளித்தனமாக புன்னகைத்தான் ஆனந்த்.!
"சோ, ஹீ ஸ்டில் லைக்ஸ் டு டாக் டு மீ என மனதிற்குள் புன்னகைத்து பரவசப்பட்டுக் கொண்டாள் மைதிலி"!
தெரியாத்தனமா மாட்டிவிட்டுடேன்டா என சைகை செய்தான் மனோ.!
"அதோ கிண்டினு போர்டு போட்டு வருதே அந்த பஸ் போகும்."
"ஆனந்த், நாங்கள் இருப்பது ஈக்காட்டுத்தாங்கல்.!"
"இந்த பஸ் அது வழியாத்தான் போகும்."
"சரி,அப்பறம் பாக்கலாம் மனோ. ஆனந்த் ஆஃபிஸ் டைம்ல எப்போ வேணுனாலும் எனக்கு கால் பண்ணலாம்!!. டேக் கேர்."
பஸ் நகர்ந்தது.
கார் பார்க்கிங் செய்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..
"என்னடா ஆபிஸ் டைம்ல கால் பண்ணாதனு சொல்லாம,கால் பண்ணுங்கிறா.அப்போ இனிமே என்ன நடக்க போகுதோ?!"என்றான் கிண்டலாக மனோ.
"என்னடா ,தினத்தந்திக்கு நீயே ஒரு நியூஸ் அதிகப்படுத்தி கொடுத்திருவ போலருக்கே?!"
இருவரும் சிரித்தனர்..!
"சரி, உனக்கும் 'ஜான்வி'க்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கே அதச்சொன்னியா?"
"இல்ல, வருத்தப்படுவா."
"டோன்ட் பீ ஸ்டுபிட் ஆனந்த். ஷி வாஸ் மேரிட்."
"விடு, பத்திரிக்கை கொடுக்கும்போது சொல்லிக்கலாம். "
இம்முறை காரின் ஓட்டுனர் இருக்கையில் ஆனந்த்.அதனால் "தென்றல் வந்து தீண்டும் பொழுதில்" இருந்து "பூங்காற்றிலே உன் சுவாசத்தை" ஆக‌ மாறி ஒலிக்க ஆரம்பித்தது சவுண்ட் சிஸ்ட்டத்தில்.!!
"ம்க்கும்,இந்த பாட்ட மாத்தறதுக்கு கூட மனசு வருது சில பேருக்கு"
என்றான் மனோ.!

"திருச்சியா இருந்தா இந்த தூரத்த‌ 20 மினிட்ஸ்ல வந்திருக்கலாம் அலுத்துக்கொன்டு இறங்கினான் ஆனந்த்.!"
"Safely reached home" என்று மெஸேஜ் வந்தது மைதிலியிடமிருந்து.!
வீட்டிற்க்குள் நுழைந்தனர்.
"டீ குடிக்க போனியே  எனக்கு தம் வாங்குனியா?"
"கிங்ஸ் இல்ல, லைட்ஸ் தான் இருக்கு. இந்தா."
"மயிரு"..
"ஏன் டென்ஷன் ஆகுற? இரு,வாட்டர் கேன் பாய் கால் பண்ணுனாலும் எடுக்க மாட்டேன்றார். நான் போய் பார்த்திட்டுஅப்படியே தம் வாங்கிட்டு வரேன்."
"சாரி டா" என்றான் ஆனந்த். தலையசத்துக்கொண்டே வெளியே சென்றான் மனோ.!
வந்த மெஸேஜ்க்கு பதில் அனுப்பலாம் என்று மொபைலை எடுத்தான். அடுத்தடுத்து இரண்டு மெசேஜ் வந்து விழுந்தது.
"All the best for your married life with Jhanvi" - maithili.
"Who is maithili?"-Jhanvi
ஒரு கணம் திகைத்தான்.
"ப்ளடி நர்மதா"!
'லைட்ஸை' பற்ற வைத்தான் ஆனந்த்..!

Sunday 22 November 2015

கண்ணாடி

தீபாவளிக்கு புத்தாடை உடுத்தி அலாங்காரம் செய்து முகம் பார்க்கிறாள் ஏழைச் சிறுமி, உடைந்த கண்ணாடியில்.!

Sunday 14 September 2014

நீ முத்தப்போர்வை போர்த்துகிறாய், குளிர் அதிகரிக்கிற‌து.!

Wednesday 9 October 2013

நீ அழுது காற்றை காயப்படுத்தாதே!

Friday 20 September 2013

கையால் ஆகாதவர்களுக்கு ஆறுதல் வாய் தான்!

Thursday 11 April 2013

                                 விரயம்

"நீ எனது அருகில் இருந்தும் தாடி வைத்து இருந்தேன், ஷேவ் பண்ண வைத்திருந்த பணம் நம் முன் ஐஸ்கிரீமாய்!!"